SHAGAYA
STANELY BIJU
நான்
கடைசியாய் கட்டுரை சிறுகதை என எழுதி ஏறக்குறைய
ஒரு வருடம் ஆகிறது. இன்று ஏதோ எழுதும் எண்ணம்.
இரவு
கடுமையான வேலை தூக்கத்தை பற்றி கொள்ள விடியற்காலை 3.00 ஆகிவிட்டது. மூளையினுள் நிலைகொள்ளாமல் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்த வேண்டாத எண்ணங்கள் சோகங்கள் அதற்றி தள்ளி வைத்துவிட்டு துக்கத்தினில் நுழைந்து பிரவேசிக்கிக்கும் வேளை, இன்று என்னை எழுத தூண்டிய அழைப்பு, கைபேசியை சிணுங்க செய்தது!!
அழைப்பு
பெங்களூரில் இருந்து, அகிலா, தூக்கம் எடுக்கவா வேண்டாமா என்ற எண்ணத்தை விதைக்க, எடுப்போம் என்று கைபேசியை நான் பற்றி எடுக்கவும் அழைப்பு துண்டிக்க பட்டது. திரையை பார்த்தேன் அகிலா தூத்துக்குடி.
இந்த
நேரத்தில் எதற்காக அழைக்கிறாள் என்று ஒரு எண்ணம் மனதில் கலக்கத்தை படரவிடும் முன் , அதே எண்ணில் இருந்து ஐந்து குறுந்செய்திகள் வந்து விழுந்தது.
"அண்ணா, ரொம்ப
தேங்க்ஸ். என் லைப் ல முக்கியமான சந்தர்ப்பத்துல
எல்லாம் என் கூட இருந்ததுக்கு. இன்னும் நாம முதல் முறை
சந்திச்சது நியாபகம் இருக்கு. அந்த நாள் கசப்பான நாள் தான், ஆனா அது வராம இருந்து இருந்தா. உங்க அறிமுகம் கிடைச்சி இருக்காது.."
என்று
சில விஷயங்களை அடிக்கி நன்றி நன்றி என்று பக்கம் பக்கமாய் நிரம்பி இருந்தாள். அவள் ஆச்சிரியமான பெண். அவளை பற்றி இன்னொரு பதிவில் பகிர்கிறேன்.
இன்று
என்னை எழுத தூண்டியது அவள் இல்லை. அவள் கூறிய நன்றி.
கன்னியாகுமரி,
நாகர்கோயில்,
2013-2014 மத்தி சரியான கால நேரம் நினைவில் இல்லை.
"சரி, பஸ்
வந்துட்டு கிளம்புறேன். எதாவது பேசணும் னு தோணிச்சு நா
எனக்கு போன் பண்ணு, மிஸ் கால் கொடு நான் பண்றேன். எங்காவது மீட் பண்ணலாம்"
என்று
என்னிடம் சொல்லி அவன் விடை பெரும் போது நேரம் 10.45 இரவு. அவனுக்கு இந்த வார்த்தைகள் இன்று நினைவு இல்லாமல் இருக்கலாம்
கல்லூரி
தோழன் உடன் படித்தவன் கூட்டமாய் சில சமயம் வெளியே பொழுதுகள் கழித்தவர்கள்அவ்வளவே. ஆழ்
நட்பு தனிமையையான நேரங்கள் உள்சிந்தனை பகிர்தல் நடந்து இருக்கலாம் அவ்வளவு அதிகமாய்
நடந்ததாய் நினைவில் இல்லை.. எல்லாரோரிடமும் இப்படியான நேரங்கள் செலவழித்து இருப்பேன்
எனவே அவ்வளவு ஆழமான நட்பு எங்கள் மத்தியில் இருந்ததாய் தெரியவில்லை.
2011 மத்தி. ஆக்ரா.
தாஜ்மஹால் ஐ சுற்றிய பொழுதில்
"பாத்து பாத்து
கதை எழுதினது போதும். சீக்கிரம் கிளம்பு, பஸ் புறப்படப்போகுது!?" சரியாக நினைவில் இல்லை இன்னும் எதோ கடினமான வார்த்தை என்னை சங்கட படுத்தும் படி கோவம் படும் படி கூற, வார்த்தை தெளித்து கோவம் கொண்டு பின்னர் பேருந்தினில் சமாதானம் ஆனா நினைவு இருக்கிறது.
பின்னர்
ஒரு நாள், கல்லூரி முடிந்து போகும் பொழுது பேருந்தில் அருகருகே அமர்ந்து கிரிக்கெட் விருப்பங்கள் குறித்து பேசிய நினைவு இருக்கிறது.
பேருந்து
ஏறும் முன் மீண்டும் ஒரு முறை "என்ன விஷயம் என்றாலும் கூப்பிடு" அதன் பின்
நான் கூப்பிட்டேனா தெரியவில்லை. அன்று அவன் என்னை விட்டு போகும் பொழுது என் தனிமை வலி
கண்ணீர் அனைத்தையும் எடுத்து விட்டு சென்றான். இன்று நான் இயங்கவும் சிரிக்கவும் அன்று
நான் அவனோடு கழித்த அந்த பொழுதே காரணம். அந்த நாள் நடவாமல் இருந்து இருந்தால் நான்
தனிமையில் பித்து பிடித்து திரிந்து இருப்பேன்
சகாய
ஸ்டானிலி பிஜு .
"டி.சாப்பிடலாமா"
என்று நாகராஜர் கோவில் அருகே இருந்த சாய் தேனீர் கடைக்கு அழைத்து சென்றான். எனக்கு தயக்கம் கையில் ஒரு நயா காசு இல்லை. வாழ்க்கை நட்பின் எல்லை பணம் என்று எனக்கு காட்டி இருந்த தருணம். அவன் வற்புறுத்தவே ஒரு வடை எடுத்து கொண்டேன். அவன் மாலத்தீவில் வேலைக்கு பொய் வந்த நேரமா போக ஆயத்த பட்டு கொண்டு இருந்த நேரமா என்று தெரியவில்லை அது சம்பந்தமாய் சில பேச்சுக்கள்
"நீ ஹெல்ப்
னு அமௌன்ட் கேட்கும் போது என்கிட்டே ஏதும் செய்ற வாய்ப்பு இல்ல ட சாரி அப்போ
ஏதும் செய்ய முடியல." பிஜு
"அதுல என்ன
ட இருக்கு ஒரு problem இல்ல. எனக்கு வருத்தம் நான் ஹெல்ப் கேட்டேன் யாராவது ஒரு கால். ஒரு ரிப்ளை. உடம்பு எப்படி இருக்கு னு யாராவது கேட்டு
இருந்தா. நான் அவ்ளோ தனிமையாய் இருந்து இருக்க மாட்டேன்" நான் அந்த பேச்சை இழுக்க விரும்பவில்லை. தொடர்பில் இல்லாத பள்ளி நண்பர்களும். அப்புறம் சுந்தர் மட்டுமே நலம் விசாரித்தது அவர்களை மறக்க கூடாது.
உதவி
செய்வது ரொம்ப சுலபம் உதவி கேட்க கூடிய இடத்துல இருக்குறது ரொம்ப கொடுமை. அப்பொழுது 8 லட்சம் தேவை மருத்துவ செலவுக்கு வீட்டிலும் சொல்ல முடியாத சூழல். உடல் நிலை குறித்து மறைக்க வேண்டிய நிலைமை. எல்லாரிடமும் டெக்னாலஜி மூலம் மார்டர்ன் பிட்சை எடுத்த சமயங்கள் கொடுமை. தோழன் தனேஷ் அண்ணன் பொன்சசிகுமார்(அவர்கள் பற்றி இன்னொரு பதிவில்) செய்த உதவி, சில NGO கள் செய்த உதவி இன்று எழுதி கொண்டு இருக்கிறேன்.
உடன்
படித்த போஸ் ஒரு முறை, "நீ ஷார்ட் பிலிம்
எடுக்க பொய் சொல்லி கேட்கிறியோ நெனச்சேன் னு " சொல்ல கேட்டு ஒரு நோய் எல்லார் மத்தியில் என்னை பொய்யன் ஆக்கியது. அதை பற்றி இப்பொது பேச விரும்பவில்லை.
நாளைய
பயத்தினால் நான் புலம்பிய வார்த்தைகளையும் புல் நுனி பனி என்று அன்று நான் எழுதிய கதையை எப்படி படமாக போகிறேன் என்று வெறுமையின் உச்சத்தில் உளறிக்கொண்டு
இருந்ததை 4 மணி நேரம் பொறுமையாய் கேட்டு கொண்டு இருந்த அந்த நாள் போக அதன் பின் பெரிய பொழுது அவனோடு செலவழிக்கவில்லை
.அவனுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்னை பற்றி வீட்டில் தெரியாத விஷயம் கூட நான் அவன் இடம் தான் பகிர்ந்து உள்ளேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் சமீபத்து விபத்து முதல், ரொம்ப நின்று கொண்டு ஒரு
வருடம் வேலை செய்ய வேண்டாம் என்று டாக்டர் கூறிய அறிவுரை வரை எல்லாம் குறும்செய்தி மூலமாவது பகிர்ந்து விடுவேன் பதில் வந்தாலும் வராவிட்டாலும்.
அவன்
அன்று சொன்ன அந்த வார்த்தைகாய்.
.பின்னர்
ஒரு நாள் ஒரு அழைப்பு, "மச்சி, எனக்கு கல்யாணம் கண்டிப்பா வந்துடு" மிகுந்த மகிழ்ச்சி. திருமணத்துக்கு அழைப்பது அவ்ளோ பெரிய விஷயமா என்று தோன்றும்.
"யார் கிட்டையும்
சொல்லல. அப்பா இறந்தநாளா அவசரம் முடிஞ்சு நம்ம பசங்க யார்கிட்டயும் சொல்ல முடியல, சாரி" நாகராஜன் ரோட்டில் எதார்த்தமாய் பார்த்த போது, தெரிந்தும் தெரியாதவன்
போல் நகர்ந்த பொழுதுகள்.
"என்னடா குமரவேல்
இன்னைக்கு இங்க ஊருக்கு வந்து இருக்க"
"இன்னைக்கு சாலமன்
கல்யாணம் ட வரலையா?"
"ஓ அப்டியே
சேரி வரேன்"
மணமேடையில்,
சாலமோன், "சாரி டா சொல்லமுடியுமா அகிட்டு"(தேவையான பொழுது என தங்கைக்கு வேலை
ஏற்படுத்தி தந்து உதவியதை என்னால் என்றும் மறக்க முடியாது என்றும் நன்றி சொல்லுவேன் அவனுக்கு)
"ஆனந்துக்கு கல்யாணம்
ஆகிட்டா "
"நாகராஜ் உனக்கு
கல்யாணம் ஆகிட்டா"
"பிபின் கு
எப்போ கல்யாணம் முடிஞ்சு"
என்
நம்பர் என்றும் மாற்றப்படாமல் இருந்தும் facebook இல் தொடர்ந்து நண்பர்களாய் இருந்த பிறகும் என்னை தொடர்பு கொள்ள முடியாமல் பல நண்பர்கள் கல்யாணம்
நடந்து
விட. பிஜு திருமணத்துக்கு ஒரு மாதம் முன்னே அழைத்தது எனக்கு ஆச்சரியமாய் தான் இருந்தது சந்தோசமும் கூட . என் பள்ளி நண்பர்கள் மட்டுமே மறவாமல் என்னை அழைத்து கொண்டு இருந்த நேரம். அவன் அழைப்பு எனக்கு அவ்வளவு உற்சாகம். சூட் இருந்த
போதும் முழு நாளும் சென்று விட்டு வந்தேன் வேலையை விட்டு. அவனுக்கு குழந்தை பிறந்த செய்தியும் மிகுந்த சந்தோசமாய் இருந்தது.
வாழ்வின்
பெரும் பகுதி வலியை எடுத்து சென்றவனுக்கு நான் எந்த சந்தர்ப்பத்திலும் நன்றி சொன்னது இல்லை. அந்த நன்றியை கூறவே இந்த பதிவு.
நன்றி பிஜு.
#A V AJITH
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக